வானம் பரந்ததாய் இருக்கலாம்
ஆனால் பறத்தலென்பது எனக்கானதாய் இருத்தலே
சிறகின் பெருமை.
ஆழியென
நிரம்பியிருக்கலாம் நீரும்
மிதத்தலோ, நீந்துதலோ எனக்கானதாய் இருத்தலே கால்களின் பெருமை
உலுப்பிவிடும் அளவுக்கு காய்த்திருக்கலாம் கண்ணீர்துளிகள் புன்னகையோ, அழுகையோ
எனது மொழியாக இருப்பதே இதழ்களின் பெருமை
எப்போதேனும்
கேள்விகளோடும், கேலிகளோடும் கடக்கவும் கூடும் இப்பயணம்
வாழ்க்கை எனக்கானதாய் இருத்தலே பிறப்பின் பெருமை!
அதுவரை ......
எனது பதில்களுக்கும் கேள்விகளுக்கும் வாயாடி என்றே
பெயர்சூட்டி அழைக்கும்
இந்த ஊமைச்சமூகம்!
பெயர்சூட்டுவதைவிட,
பெருமை சூட்டுங்கள் அமைதியாகும்
பெருங்கடலின் பேரிரைச்சல் !
படமும் கவிதையும் அருமை. பாராட்டுகள்.
பதிலளிநீக்கு// பெயர் சூட்டுவதை விட, பெருமை சூட்டுங்கள்... // ஆகா...!
பதிலளிநீக்கு