செவ்வாய், 17 நவம்பர், 2015

நீ சூழ் உலகு

கவிதையென்றால் கதவடைப்பவர்கள் மத்தியில் நீ ஜன்னல் திறக்கிறாய் ...
என் வானம் விரியக்காண்கிறேன் நான்!

யாருமற்ற ஓருலகில்
யாவுமாகிறாய்
நீர் சூழ்ந்த இவ்வுலகில்
நீ சூழ வாழ்கிறேன்
தீவென உன்னினைவில் மிதந்தபடி

முடங்கிப்போன என் காலத்தின் சக்கரங்களாகிறாய் ....
சுற்றுகிறேன் திக்குதிசை தெரியாமல் திளைத்த   மகிழ்ச்சியில்!

அத்தனை விண்மீண்கள் அவதரிப்பினும்
துருவ நட்சத்திரம் நீயாகிறாய் - என் ஆகாயமண்டலத்தில்!

உடலைதுறந்துவிட்டு
உயிர்மட்டும்  உன்னோடு சுற்றிவர ஆசைக்கொண்டேன்!

ஆண்டாண்டு காலங்கள்
போனால் என்ன?
அரைநூற்றாண்டு
ஆனால்  என்ன?

வரலாறுகள் எழுதாமல்கூட போகட்டும் உன்னைப்பற்றி

என்வரலாறு என்பதெல்லாம் உன்னைப்பற்றியதை பற்றியே....

5 கருத்துகள்:

  1. Gadgets அனைத்தும் பதிவை மறைக்கின்றன... மாற்றவும்... நன்றி...

    dindiguldhanabalan@yahoo.com
    9944345233

    பதிலளிநீக்கு
  2. அழகான கவிதை! திண்டுக்கல் தனபாலன் அவர்கள் சொன்னதைப்போல வலைப்பக்கத்தைச் செம்மைப்படுத்த வேண்டும். இல்லையென்றால் வந்து படிப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும்.

    பதிலளிநீக்கு
  3. //என்வரலாறு என்பதெல்லாம் உன்னைப்பற்றியதை பற்றியே...//

    மீயன்பியல் சொல்லும்
    மீயழகு வரிகள்

    பதிலளிநீக்கு