புதன், 25 நவம்பர், 2015

முகமூடி மனிதர்கள்

நாடகம் முடிந்த பின்னும் கூட
ஒப்பனைகலைக்காத உன் வேசம்

நம்பவேமறுக்கிறது
எத்தனைமுறை புரண்டழுதபோதும்!

தேர்ந்தெடுக்கிறாய் தேவைக்களுக்கேற்ப பொருட்களைப்போல மனிதர்களையும்

அணிந்துக்கொள்கிறாய் முகமூடிகளை
அவ்வப்போதுக்கான  நிறங்களில்

என்றாலும் ஆயுள் வரை நிலைக்கப்போவதில்லை - உன்
நிஜம் பூசாத ஒப்பனைகள்

ஒளிந்தே பழகிய உனக்கு
உண்மையாக வாழ்வது
உண்மையில் கடினம்தான்

கழற்றியெறியப்படக்கூடும் 
காலத்தின் சுழற்சியில்  நீயும்
நிறமிழந்த முகமூடிக்கூடுகளாய் !

நிலாபாரதி

5 கருத்துகள்:

  1. மிக மிக அருமை
    இக்கவிதையைப் படிக்கையில்
    முகமுடி இல்லாததால் இரசிதுப் படிக்க முடிந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. மிக மிக அருமை
    இக்கவிதையைப் படிக்கையில்
    முகமுடி இல்லாததால் இரசிதுப் படிக்க முடிந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. ஆஹா அருமையான பகிர்வு, அருமை அருமை, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. //கழற்றியெறியப்படக்கூடும்
    காலத்தின் சுழற்சியில் நீயும்
    நிறமிழந்த முகமூடிக்கூடுகளாய்//

    ஆழமான பார்வை
    அழகிய எழுத்துக் கோர்வை

    பதிலளிநீக்கு