திங்கள், 22 பிப்ரவரி, 2016

தூண்டில்

வார்த்தைகளால் வசீகரிக்கிறாய்
வலைவீசாமல் மாட்டிக்கொள்கிறேன்
துடிப்பதற்க்காகவே  
தூண்டில் இடுகிறாய்

தறியின் கரம்பிடித்த  நூலாய்
விலக மனமின்றி
உறவாடிக்கொண்டே இருக்கிறேன்
உயிரின் ஊடாக...... 

ஏகாந்த அலைகளை
எழுப்பிக்கொண்டே போகிறாய்
இசையென எண்ணி
இரைச்சல்களையும்
ரசித்துக்கொண்டிருக்கிறது மனம்

ஊசித்துளைக்காத
உயிரையும் துளைத்து 
நீ நுழைந்தாய்
ஒரு வ(லி)ழியும்   இல்லாமல்...!!

வீட்டுக்கு வந்த
விருந்தாளியைப்  பற்றிக்கொண்டு
விடாமல் அழும் குழந்தையாய்
உனைப்பற்றி
குழறிக் குழறி கெஞ்சுதடி
குரல்வளையும்
என் உயிர்வளியும்!!

என்னை விட்டு
எப்போது நீ  போகிறாயோ
அந்நொடியில்
உன்னோடே வந்துவிட
உயிர்
பயிற்சி   எடுக்குதடி
ஒவ்வொருமுறையும்
வெளிவந்து .......

கவிதாயினி நிலாபாரதி

7 கருத்துகள்:

  1. என் வலையிணைப்பில் சேர்த்திருக்கிறேன். தொடர்ந்து வெளுத்து வாங்கிட வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  2. உனைப்பற்றி
    குழறிக் குழறி கெஞ்சுதடி
    குரல்வளையும்
    என் உயிர்வளியும்!!“
    அட இது புதுசா, நல்லா இருக்கே?
    ஆண்குரலில் பெண்? (எல்லாம் ஒரு பாதுகாப்புத்தான?)

    பதிலளிநீக்கு
  3. அற்புதம்....
    மீண்டும் மீண்டும் படித்து இரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. என்ன ஆச்சு? நாலு நாளாச்சு அடுத்த பதிவு என்னாச்சும்ா?

    பதிலளிநீக்கு