செவ்வாய், 10 நவம்பர், 2015

தீராவலி

எப்போதுமே அழுதுகொண்டே பிறக்கிறது தீபாவளி
எந்தவருடத்திலும் கொடுத்துவிடப்போவதில்லை
என்போன்ற
ஏழைக்கான புன்னகையை!

அரையிருட்டில் அச்சுஅசலாய்
அதிரசமும் ஐநூறு நெய்முறுக்கும்
அடுக்கடுக்காய் வைக்கப்பட்ட
மத்தாப்புபெட்டிகளும் பட்டாசுகளோடு மின்னும் பட்டாடைகளும் மொத்தமாய் வாங்கிக்கட்டிக்கொள்ளத்தான் வகைவகையாய் தோன்றுதடி
ஆயிரக்கணக்கில்!

எட்டுநாளைக்குமுன்னே எண்ணியெண்ணி எடுத்துவைத்த எட்டணாகாசெல்லாம்
எடுக்கப் போய் நிற்கையிலே
எட்டாக்கனவென்று கைக்கொட்டிச்சிரிக்குதடி

அடிவயிற்றின் வலிதாளாமல்
அழுதுபுரளும்  அண்டைவீட்டு
அம்முவின் அழுகுரலில்
அதிரடித்த சத்தமெல்லாம்
சுத்தமாய் ஒடுங்கியேபோனதடி

ஆண்டாண்டு காலமாய் ஆண்டவரிடம்
கிடைக்காத விடுதலையும் கிடைத்துவிடும்
இனாம்தொகையும் இனிப்புகளும்
எப்படி ரசிக்கவும்
ருசிக்கவும் செய்யும்
தீபாவளி எனும் இந்த
தீராவலியை?
.

1 கருத்து:

  1. ''எட்டுநாளைக்குமுன்னே எண்ணியெண்ணி எடுத்துவைத்த எட்டணாகாசெல்லாம்
    எடுக்கப் போய் நிற்கையிலே
    எட்டாக்கனவென்று கைக்கொட்டிச்சிரிக்குதடி''

    ஆழமான வரிகள்
    செம்படைப்பு தோழர்

    பதிலளிநீக்கு